நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த லாரி
நடுரோட்டில் லாரி தீப்பற்றி எரிந்தது
தாயில்பட்டி
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்தவர் விஜய் (வயது 42) இவர் தனது லாரியில் வெம்பக்கோட்டை அருகே சிப்பிப்பாறை கிராமத்தில் தோட்டத்துக்கு வேலி அமைக்க கல்தூண்களை ஏற்றிக்கொண்டு வந்தார். துலுக்கன்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே நேற்று அதிகாலை 5 மணி அளவில் லாரி வந்தபோது, எதிர்பாராதவிதமாக லாரியில் புகை வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜய் மற்றும் அதில் வந்த தொழிலாளர்கள், லாரியை உடனடியாக நிறுத்திவிட்டு இறங்கினர். பின்னர் தீ மளமளவென லாரியில் பரவியது. இதுகுறித்து அறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர் பாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை கட்டுப்படுத்த முடியாததால் ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் லாரி பலத்த சேதம் அடைந்தது. இச்சம்பவம் குறித்து லாரியின் உரிமையாளர் விஜய், வெம்பக்கோட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் வழக்குப்பதிவு செய்து, லாரியில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.