கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை


கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x

கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியல் அருகே உள்ள மூலச்சன்விளையை சேர்ந்தவர் சிவதாஸ் (வயது 60). இவர் சொந்தமாக லாரி வாங்கி ஓட்டி வந்தார். சிவதாசிற்கு லாரி வாங்கியதிலும், வீடு கட்டியதிலும் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிைலயில் காணப்பட்டு வந்தார். சம்பவத்தன்று படுக்கை அறையில் சிவதாஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி கீதா இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிவதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story