ரெயில்வே தடுப்பு கம்பியில் சிக்கிய லாரி
நாட்டறம்பள்ளி அருகே ரெயில்வே தடுப்பு கம்பியில் லாரி சிக்கியது.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே பந்தரபள்ளி பகுதியில் ரெயில்வே துறை சார்பில் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி வரும் லாரி மற்றும் உயரத்தை தடுக்கும் வண்ணமாக 'ஐகேஜ்' எனப்படும் உயர தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுப்பேட்டை வழியாக நாட்டறம்பள்ளிக்கு ஒரு லாரியை டிரைவர் ஓட்டி வந்தார். அப்போது பந்தரபள்ளி பகுதியில் அமைந்துள்ள உயர தடுப்பு அளவு கம்பியில் லாரி சிக்கி கொண்டது.
இதனால் செய்வதறியாமல் டிரைவர் திகைத்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் வரவழைத்து 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மூலம் லாரியை தள்ள சொல்லி சுமார் 1 மணி நேரம் போராடி லாரியை எடுத்துச் சென்றார்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story