ஈரோட்டில் இருந்து மதுரைக்கு லாரியில் அனுப்பப்பட்ட ரூ.1½ லட்சம் மதிப்பிலான மசாலா பொருட்கள் திருட்டு;4 பேர் கைது

ஈரோட்டில் இருந்து மதுரைக்கு லாரியில் அனுப்பப்பட்ட ரூ.1½ லட்சம் மதிப்பிலான  மசாலா பொருட்கள் திருட்டு;4 பேர் கைது
x

ஈரோட்டில் இருந்து மதுரைக்கு லாரியில் அனுப்பப்பட்ட ரூ.1½ லட்சம் மதிப்பிலான மசாலா பொருட்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

பவானி

ஈரோட்டில் இருந்து மதுரைக்கு லாரியில் அனுப்பப்பட்ட ரூ.1½ லட்சம் மதிப்பிலான மசாலா பொருட்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மசாலா கம்ெபனி

ஈரோட்டை அடுத்த மாமரத்துப்பாளையத்தில் பிரபலமான மசாலா கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் இருந்து மதுரைக்கு மசாலா பொருட்கள் அனுப்பப்பட்டது. ஆனால் மதுரைக்கு அனுப்பப்பட்ட மசாலா பொருட்களில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 250 மதிப்பிலான 630 கிலோ மசாலா பொருட்களை காணவில்லை.

இதுகுறித்து மசாலா கம்பெனி நிர்வாகம் சாார்பில் சித்தோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

4 பேர் கைது

மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது லாரியில் இருந்து மசாலா பொருட்களை 4 பேர் திருடியதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து லாரியில் இருந்து மசாலா பொருட்களை திருடியதாக மதுரை மாவட்டம் புதுக்கோட்டை நாகமலையை சேர்ந்த பிரசாத் (வயது 37), மதுரை உசிலம்பட்டி கொக்கிகுளம் பகுதியை சேர்ந்த பாரதி (31), மதுரை திருமங்கலம் சொக்காவூரணியை சேர்ந்த ரூபன் (24), மதுரை புதுக்கோட்டை நாகமலை மேலக்குடி கோகிலா நகரை சேர்ந்த முத்துக்குமார் (49) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 630 கிலோ மசாலா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

Related Tags :
Next Story