கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
பர்கூர் அருகே கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி
பர்கூர்
கிருஷ்ணகிரி கனிமவளபிரிவு உதவி இயக்குனர் பொன்னுமணி மற்றும் அதிகாரிகள் அச்சமங்கலம் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 2 லாரிகளிலும் ஆந்திர மாநிலம் குப்பம் சித்தூர் பகுதிகளில் இருந்து கிரானைட் கற்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இது குறித்து அதிகாரி பொன்னுமணி கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து டிரைவர்கள் சத்யசீலன் (வயது43), முருகன் (45) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 2 லாரிகள், கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story