மண் அள்ளி வந்த லாரிகள் பறிமுதல்


மண் அள்ளி வந்த லாரிகள் பறிமுதல்
x

வேடசந்தூரில், மண் அள்ளி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல்

வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில்தெரு வழியாக கிணற்று மண் அள்ளி கொண்டு 2 லாரிகள் வந்தன. அப்போது அங்கு நின்று இருந்த இந்து மக்கள் கட்சியினர், அந்த லாரிகளை நிறுத்தினர். பின்னர் மண் ஏற்றி செல்வதற்கான அனுமதி சீட்டை கேட்டனர். அதில், டிரைவர்கள் கொடுத்த அனுமதி சீட்டு போலியானது என்று தெரியவந்தது.

இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு, இந்துமக்கள் கட்சியினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story