ஆக்கிரமிப்புகள் அகற்ற முயற்சி


ஆக்கிரமிப்புகள் அகற்ற முயற்சி
x

மேலப்பாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற முயற்சி பொதுமக்கள் போராட்டத்தால் கைவிடப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தில் ரோட்டையொட்டி உள்ள வீடு, கடைகளை அகற்றுவதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று சென்றனர். அங்குள்ள ஒரு கட்டிடத்தை இடிக்க முயற்சி செய்த போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களுடன் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தென் மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார், நெல்லை மாவட்ட செயலாளர் ஜமால், பொருளாளர் சாந்தி ஜாபர், மேலப்பாளையம் பகுதி செயலாளர் அப்பாஸ், இளைஞர் அணி சுலைமான் உள்ளிட்டோர் அங்கு திரண்டு போராட்டம் நடத்தினர். மேலும் அங்குள்ள மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலுக்கு முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாது. கோர்ட்டு மூலம் தீர்வு காணவும், முன் அறிவிப்பு கொடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story