மரங்களை வெட்டி கடத்த முயற்சி


மரங்களை வெட்டி கடத்த முயற்சி
x

லால்குடி அருகே மரங்களை வெட்டி கடத்த முயன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

லால்குடி அருகே மரங்களை வெட்டி கடத்த முயன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வாகை மரங்கள்

லால்குடி அருகே எல்.அபிஷேகபுரம் பகுதியில் உள்ள கொடுவாய் வாய்க்கால் கரையில் வாகை மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களை கடத்தி செல்வதற்காக யாரோ மர்ம நபர்கள் வெட்டி போட்டுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் வருவாய் கோட்டாட்சியருக்கு புகார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் எல்.அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரியை நேரில் சென்று ஆய்வு நடத்த உத்தரவிட்டார். அதன் பேரில் அவர் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.

வலைவீச்சு

அப்போது, சிலர் மரங்களை வெட்டி கடத்த முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கஸ்வர் லால்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரங்களை வெட்டி கடத்த முயன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story