மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி


மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 1:08 PM IST)
t-max-icont-min-icon

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த நாலுவேதபதி கிராமத்தை சேர்ந்தவர் சாம்பசிவம் (வயது62). இவரது வீட்டுக்கு சம்பவத்தன்று 33 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண் டி.வி. பார்க்க சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை சாம்பசிவம் மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். அங்கு பெண்ணின் தந்தையை பார்த்ததும், சாம்பசிவம் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை வேட்டைக்காரனிருப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாம்பசிவத்தை கைது செய்தனர்.


Next Story