பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி


பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
x

நெல்லை அருகே பேட்டையில் பெண்ணிடம், மர்மநபர் ஒருவர் நகை பறிக்க முயன்றார்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லையை அடுத்த பேட்டை ரெயில்வே கேட் அருகில் ஒரு தம்பதியர் நேற்று இரவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் திடீரென்று முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் நகையை பறிக்க முயன்றார்.

இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் நிலைதடுமாறி கீழே விழுந்தன. எனினும் அந்த பெண் நகையை இறுக பிடித்து கொண்டு கூச்சலிட்டதால், மர்மநபர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story