"ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு முழு காரணம் டிடிவி தினகரன் தான்" - சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி பேச டிடிவி தினகரனுக்கு தகுதி இல்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
சென்னை,
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
சொத்துக் குவிப்பு வழக்கில் டிடிவி தினகரனால் தான் ஜெயலலிதா சிறைக்கு சென்றார். அதனால் தான் டிடிவி தினகரன் வீட்டைவிட்டு ஜெயலலிதா விரட்டியடித்தார். அம்மாவுக்கும் துரோகம் செய்தவர். அவர் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டிய அவசியம் இல்லை. டிடிவி தினகரனை நம்பி சென்ற 18 எம்எல்ஏக்கள் இன்று அனாதையாக உள்ளனர். அவரை நம்பியவர்கள் தான் ஏமாந்து போனார்கள். எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை தந்துள்ளார். அதிமுக கட்சியை காப்பாற்றினார். 75 உறுப்பினர்களை பெற்று சாதனை பெற்று இருக்கிறார். தினகரன் நடத்துவது கட்சி அல்ல, கோஷ்டி என்றார்.
Related Tags :
Next Story