நாமக்கல்லில் காசநோய் விழிப்புணர்வு கூட்டம்


நாமக்கல்லில் காசநோய் விழிப்புணர்வு கூட்டம்
x

நாமக்கல்லில் காசநோய் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

நாமக்கல்

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆயூஷ் டாக்டர்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு காசநோய் பிரிவு துணை இயக்குனர் வாசுதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கண்ணண் முன்னிலை வகித்தார். இதில் காசநோய் அறிகுறிகள், பரவும் விதம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர்களுக்கு துணை இயக்குனர் வாசுதேவன் சான்றிதழ்கள் வழங்கினார். இதில் காசநோய் பிரிவு பணியாளர்கள், ஆயுஷ் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story