குலசேகரன்பட்டினத்தில் காசநோய் தடுப்பு முகாம்


குலசேகரன்பட்டினத்தில் காசநோய் தடுப்பு முகாம்
x

குலசேகரன்பட்டினத்தில் காசநோய் தடுப்பு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வீடுதேடி காச நோய் கண்டறியும் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த நடமாடும் வேன்முகாம்மூலம் குலசேகரன்பட்டினம், மணப்பாடு சுனாமி நகர் பகுதிகளில் 50 பேருக்கு எக்ஸ்ரேஎடுக்கப்பட்டது.இந்த முகாமில் வட்டார மருத்துவர் அனிபிரிமின், குலசேகரன்பட்டினம் மருத்துவர் ஆர்த்தி பிரசாத், சுகாதார மேற்பார்வையாளர் குருசாமி, முத்து செல்வன், முதுநிலை மேற்பார்வையாளர் பார்த்திபன், ஆற்று படுத்துனர் சங்கர், காசநோய் ஒருங்கிணைப்பாளர்கள் மோகன், ரினா ஜஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story