காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்


காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்
x

ஆரணி அருகே காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

காசநோய் இல்லா தமிழ்நாடு, காசநோய் இல்லாத திருவண்ணாமலை என்ற இலக்கை அடையும் நோக்கில் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கப்பட்ட நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலமாக களப்பணி ஆய்வு செய்து காசநோய் அறிகுறி உள்ள நபர்களுக்கு இலவசமாக எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை செய்யப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக துணை இயக்குனர் (காசநோய்) அறிவுரையின்படி ஆரணியை அடுத்த எஸ்.வி. நகரம் வட்டார மருத்துவ அலுவலகத்திற்கு உட்பட்ட நெசல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வேலப்பாடி இலங்கை அகதிகள் முகாம் ஆகிய இடங்களில் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை பயன்படுத்தி காச நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

இதில் காசநோய் அறிகுறிகள் உள்ள 44 நபர்களுக்கு எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் காசநோய் கண்டறியப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு பெட்டகத்தினை வட்டார மருத்துவ அலுவலர் ஹேம்நாத் வழங்கினார்.

ஆரம்ப சுகாதார டாக்டர் சுஷ்மிதா மற்றும் மாவட்ட காசநோய் நல கல்வியாளர் சேஷத்திரி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் அருணா தேவி, தனுஷ் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story