கனரக தொழிற்சாலைகள்குறித்துமக்களின் அச்சத்தை போக்க தனிக்குழு அமைக்க துடிசியா வலியுறுத்தல்


கனரக தொழிற்சாலைகள்குறித்துமக்களின் அச்சத்தை போக்க தனிக்குழு அமைக்க துடிசியா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கனரக தொழிற்சாலைகள்குறித்துமக்களின் அச்சத்தை போக்க தனிக்குழு அமைக்க வேண்டும் என்று துடிசியா கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கனரக தொழிற்சாலைகள் குறித்து மக்களின் அச்சத்தை போக்க தனிக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று துடிசியா கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட சிறு மற்றும் குறு தொழில் சங்கமான துடிசியாவின் 31-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சங்க கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் நேருபிரகாஷ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராஜ்செல்வின் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மக்களின் மனதில் கனரக தொழிற்சாலைகள் அமைவதால் ஏற்படும் அச்சத்தை போக்கும் விதமாகவும், தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் முதலீடுகள் ஏற்படுவதற்கு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் தனி குழு அமைக்கப்பட வேண்டும். அந்த குழுவில் அனைத்து சங்க பிரதிநிதிகள், தொழில்முனைவோர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வக்கீல்கள், ஆடிட்டர்கள் இடம்பெற வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தின் பெருமைகள் மற்றும் தொழில் முதலீடு செய்வதற்கு உள்ள கட்டமைப்புகள் குறித்து சர்வதேச தரத்தில் ஒரு குறும்படம் எடுத்து உலகமெங்கும் கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியா முழுவதும் இருந்தும் தொழில் முதலீடுகள் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும். தொழில் முனைவோர்கள் குறைதீர்ப்பு கூட்டமும் நடத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story