காமநாயக்கன்பட்டியில் செவ்வாய்க்கிழமைபுனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா


காமநாயக்கன்பட்டியில் செவ்வாய்க்கிழமைபுனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா
x
தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

காமநாயக்கன்பட்டியில் செவ்வாய்க்கிழமை புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா நடைபெறுகிறது.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

காமநாயக்கன்பட்டியில் புகழ் பெற்ற 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பரலோக மாதா ஆலய திருவிழா கடந்த 6-நதேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு மறையுரை சிந்தனை மற்றும் நற்செய்தி வழங்கப்பட்டு வருகிறது. இன்று(திங்கட்கிழமை) இரவு மணியளவில் பங்கு பேரவை உறுப்பினர்கள், அன்பிய பொறுப்பாளர்கள் மற்றும் வின்சென்ட் தே பவுல் சபை சார்பில் பங்குதந்தையர்கள் பங்கு பெறும் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. முக்கிய நிகழ்வான விண்ணேற்பு பெருவிழா நாளை (செவ்வாய் கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 2 மணியளவில் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் தேரடி திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு பங்கு தந்தையர்கள் லூர்துமரியசுதன், மரியதுரை ஆகியோர் தலைமையில் திருவிழா திருப்பலியும், காலை 8 மணியளவில் கோவில்பட்டி பங்கு தந்தை சார்லஸ், தூத்துக்குடி மறை மாவட்ட செயலக முதல்வர் ஜான்செல்வம் ஆகியோர் தலைமையில் திருப்பலியும் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு வெம்பூர் பங்கு தந்தை மரியதாஸ், நாகலாபுரம் பங்குதந்தை ரெயோசில்பெப்பி ஆகியோர் தலைமையில் திருப்பலியும் நடைபெறுகிறது. மதியம் 2 மணியளவில் பாட்டாக்குறிச்சி குருமாணவர் இல்லம் சார்பில் அதிபர் ஜாய்கல்லறக்கல் தலைமையில் மலையாளத்தில் திருப்பலியும், பாளை குடும்ப நல்வாழ்வு பணிக்குழு சார்பில் பங்கு தந்தை ஜெமல்ஸ்ஜேம்ஸ் தலைமையில் ஆங்கிலத்தில் திருப்பலியும் நடக்கிறது. இரவு 7 மணியளவில் ஜேசு சபை அருட்தந்தையர் சார்பில் திருப்பலி, நற்கருணை பவனி நடைபெறுகிறது.


Next Story