செவ்வாய்க்கிழமை மின்நுகர்வோர்குறைதீர்க்கும் கூட்டம்
புதியம்புத்தூரில் செவ்வாய்க்கிழமை மின்நுகர்வோர்குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி பஸ் நிலையில் அருகே உள்ள சுடலைமணிநாடார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இ்க்கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை தாங்கி, மின்நுகர்ேவாரிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார். இதில் புதியம்புத்தூர் உப மின் கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள், கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து உரிய நிவாரணம் பெறலாம், என அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story