பரிமள ரங்கநாதர் கோவிலில் துலா உற்சவம்
திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் துலா உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் துலா உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
துலா உற்சவம்
மயிலாடுதுறையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் துலா உற்சவம் 10 நாட்கள் நடப்பது வழக்கம்.காவிரி நதியை மையப்படுத்தி நடக்கும் முக்கிய உற்சவமான துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது.
கொடியேற்றத்துடன்தொடங்கியது
அதன்படி இந்த ஆண்டு துலா உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பட்டாச்சாரியார்கள் கருடக்கொடியை ஏற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் வருகிற 15-ந் தேதியும்(செவ்வாய்க்கிழமை), தேர்திருவிழா 16-ந்் தேதியும்(புதன்கிழமை), கடைமுக தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள்.