துளிர் அறிவியல் வினாடி வினா போட்டி
துளிர் அறிவியல் வினாடி வினா போட்டி நடைபெற்றது.
திருப்பத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான துளிர் அறிவியல் வினாடி வினா போட்டி திருப்பத்தூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது. ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என்று மூன்று நிலைகளில் நடைபெற்ற போட்டியை மாவட்ட உதவி திட்ட அலுவலர் பிரபாகரன் தொடங்கி வைத்தார். செயலாளர் ஸ்ரீதரன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் நெடுஞ்செழியன், அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் துரைமணி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
ஆசிரியர்கள் இமாச்சலம் கிருஷ்ணன், டாலிமெர்ஸி, எழில்மாறன், சாந்தகுமார், கோபிநாதன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். ஒன்றிய செயலாளர் செண்பகவல்லி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இதில் 210 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒன்றிய அளவில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவ- மாணவிகள் மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.