துளிர் அறிவியல் வினாடி வினா போட்டி
துளிர் அறிவியல் வினாடி வினா போட்டி நடைபெற்றது.
கந்திலி ஒன்றியத்தைச் சேர்ந்த அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான துளிர் அறிவியல் வினாடி வினா போட்டி கந்திலி ஒன்றியம் குனிச்சி தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடந்தது. வட்டாரக் கல்வி அலுவலர் தென்னவன் போட்டியை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு ராமநாதன், சரவணன், துணைத் தலைவர் துரைமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஆசிரியர்கள் சண்முகம், மாதையன், கல்பனா, சூர்யா, ஏழுமலை, சக்தி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். மாவட்ட இணைச் செயலாளர் மாரிமுத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஜூனியர் பிரிவில் குனிச்சி மோட்டூர் நடுநிலைப்பள்ளி, நரியனேரி நடுநிலைப்பள்ளி, சீனியர் பிரிவில் கெஜல்நாயக்கன்பட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகண்ணாலப்பட்டி மேல்நிலைப்பள்ளி, சூப்பர் சீனியர் பிரிவில் பெரியகண்ணாலப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.