தும்பராம்பட்டு சோலையம்மன் கோவில் கும்பாபிஷேகம்


தும்பராம்பட்டு  சோலையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

தும்பராம்பட்டு சோலையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலையில் சேராப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட தும்பராம்பட்டு கிராமத்தில் சோலையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 26-ந்தேதி சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைதொடர்ந்து நேற்று கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாகசாலையில் விநாயகா் வழிபாடு, வாஸ்துசாந்தி, கணபதி ஹோமம், யாகசாலை பூஜை நடைபெற்றது. இதையடுத்து கோ பூஜை, நாடி சந்தானம், வேதபாராயணம், திருமஞ்சனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் தும்பராம்பட்டு, சேராப்பட்டு, குரும்பலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் மலைவாழ் மக்கள் செய்திருந்தனர்.


Next Story