முத்தூர் பகுதிகளில் தொடர் சாரல், மிதமான, பலத்த மழையால் மஞ்சள் செடிகளில இலைக்கருகல் மற்றும் இலைப்புள்ளி நோய்கள் தாக்கி உள்ளன.
முத்தூர் பகுதிகளில் தொடர் சாரல், மிதமான, பலத்த மழையால் மஞ்சள் செடிகளில இலைக்கருகல் மற்றும் இலைப்புள்ளி நோய்கள் தாக்கி உள்ளன.
முத்தூர்,
முத்தூர் பகுதிகளில் தொடர் சாரல், மிதமான, பலத்த மழையால் மஞ்சள் செடிகளில இலைக்கருகல் மற்றும் இலைப்புள்ளி நோய்கள் தாக்கி உள்ளன.
கீழ்பவானி பாசன பகுதிகள்
திருப்பூர் மாவட்டம் முத்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன கால்வாய்களில் ஆண்டுதோறும் இரு பிரிவுகளாக திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி நஞ்சை சம்பா நெல் மற்றும் எண்ணெய்வித்து பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கிணற்று நீர் பாசனம் மூலம் மஞ்சள், கரும்பு, வாழை மற்றும் காய்கறி சாகுபடிகள், கீரை சாகுபடிகள், மா, நெல்லி, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட பழ வகை சாகுபடியும் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே மஞ்சள் விற்பனைக்கு புகழ்பெற்ற ஈரோடு மஞ்சள் மார்க்கெட் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குவிண்டால் மஞ்சள் அப்போதைய ஒரு பவுன் தங்கத்துக்கு இணையாக ரூ.20 ஆயிரம் வரை விற்பனை ஆகியது. இதனை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரோடு, திருப்பூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகள் தங்களது வேளாண் வயல்களில் மஞ்சள் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினர். இதன்படி தற்போது இப்பகுதியில் 1 ஏக்கர் முதல் 2 ஏக்கர் வரையில் மொத்தம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
இதில் மஞ்சள் சாகுபடி செய்வதற்கு மண் செப்பனிடுதல், குப்பை இடுதல், நல்ல தரமான விதை மஞ்சள், உழவு கூலி, பயிர் பாதுகாப்பு மேலாண்மை, உர பாதுகாப்பு மேலாண்மை, களைக்கொல்லி எடுத்தல், மஞ்சள் அறுவடை என ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வரை முதலீடு செய்து உள்ளனர்.
இலைப்புள்ளி நோய் தாக்குதல்
இதன்படி இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் செடிகள் ஓரளவு நன்கு வளர்ந்து பச்சை பசேலென்று காட்சிய அளிக்கின்றன. இந்த நிலையில் தற்போது இப்பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக பெய்த தொடர், அடர், சாரல், மிதமான, பலத்த மழையால் மஞ்சள் செடிகளை இலைக்கருகல் மற்றும் இலைப்புள்ளி நோய்கள் ஆங்காங்கே தாக்கி உள்ளன. இதனால் மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் மஞ்சள் வயல்களில் உள்ள மஞ்சள் செடிகளில் இலைக்கருகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களால் செடிகள் பரவலாக காய்ந்து பழுப்பு நிறத்திற்கு மாறி வறண்ட நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகளுக்கு மஞ்சள் மகசூலில் மஞ்சள் கிழங்கு வளர்ச்சி பாதிக்கப்படும் அபாய சூழ்நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது. மேலும் மஞ்சள் செடிகளின் கீழே மஞ்சளின் உற்பத்தியும், எடையும் குறைந்து நஷ்டம் ஏற்படும் அபாய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகள் மூலம் இப்பகுதிகளில் தொடர், அடர், சாரல், மிதமான, பலத்த மழையால் மஞ்சள் செடிகளை தாக்கி உள்ள இலைக்கருகல் மற்றும் இலைப்புள்ளி நோய்க்கான உரிய பயிர் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கியும், பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றுவதற்கான வழிமுறைகள் பற்றியும் விரிவாக விளக்கி கூற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மஞ்சள் சாகுபடிக்கு இழப்பீட்டு
மேலும் மஞ்சள் செடிகளை தாக்கி உள்ள இலைக்கருகல் மற்றும் இலைப்புள்ளி நோயால் கருகி காய்ந்து உள்ள மஞ்சள் சாகுபடி பரப்பை கணக்கீடு செய்து அதற்குரிய இழப்பீட்டு தொகையை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மஞ்சள் சாகுபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
---