துத்துக்குடி: திருக்கோளூர் அகழாய்வில் 324 தொல்பொருட்கள் கண்டெடுப்பு.!
துத்துக்குடி மாவட்டம் திருக்கோளூர் அகழாய்வில் 324 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் கிழக்கே உள்ள திருக்கோளூரில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணியை கடந்த பிப்.5-ம் தேதி தொடங்கியது. அகழாய்வில் நேர்த்தியான மண் தளங்கள், செம்பு காசுகள், அடுப்பு, பாசிகள், சுடுமண் உருவங்கள் என ஏராளமான பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், திருக்கோளூர் அகழாய்வில் 324 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். முக்கியமாக இதில், இடைக்கால நாணயங்கள், டெரகோட்டா மணிகள், சிலைகள், கண்ணாடி வளையல் துண்டுகள், சீன பானை ஓடுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story