தூத்துக்குடி ஆயுதப்படை குடியிருப்பில் ரூ.5½ லட்சம் செலவில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்துக்கு அடிக்கல்


தூத்துக்குடி ஆயுதப்படை குடியிருப்பில் ரூ.5½ லட்சம் செலவில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்துக்கு அடிக்கல்
x
தினத்தந்தி 28 July 2023 12:15 AM IST (Updated: 28 July 2023 5:14 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஆயுதப்படை குடியிருப்பில் ரூ.5½ லட்சம் செலவில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்துக்கு அடிக்கல்லை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நாட்டினார்.

தூத்துக்குடி

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்து உள்ளது. இந்த குடியிருப்பில் 392 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் போலீசாரின் குடும்பத்தை சேர்ந்த 2 ஆயிரம் பேர் வரை குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ரூ.5½ லட்சம்

அதன்படி ரூ.5½ லட்சம் செலவில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனைமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story