தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்பயனாளிகளுக்கு ரூ.1. 47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்பயனாளிகளுக்கு ரூ.1. 47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ரூ.1.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
கோரிக்ைக மனுக்கள்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டாபெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 360 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
நலத்திட்ட உதவிகள்
அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு வாரத்தை முன்னிட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு 12 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும் 4 பேருக்கு விலையில்லா மின் மோட்டாருடன் கூடிய தையல் எந்திரங்களும், ஒருவருக்கு விலையில்லா தேய்ப்பு பெட்டி என 17 பேருக்கு ரூ.ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 968 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், சமூகபாதுகாப்புதிட்ட துணை கலெக்டர் ஜேன் கிறிஸ்டி பாய் மற்றும் அனைத்துத்துறை அரசுஅலுவலர்கள் கலந்துகொண்டனர்.