தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகத்தில்போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு


தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகத்தில்போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வருகிற 25-ந் தேதி(ெவள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

போலீஸ் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 3 ஆயிரத்து 359 இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிட்டு உள்ளது. இந்த தேர்வுக்கு 18.8.2023 முதல் 17.9.2023 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை https://tnusrb.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் அறியலாம்.

பயிற்சி

இந்த போட்டித் தேர்வுக்கு தயாராகும் தூத்துக்குடி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ந் தேதி(வெள்ளிக் கிழமை) (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் அலுவலக நூலகத்தில் உள்ளது. மேலும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

இந்த பயிற்சி வகுப்பில் சேருவதற்கு அலுவலக வேலை நாட்களில் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வரவேண்டும். நேரில்வர இயலாத பட்சத்தில் உங்கள் செல்போனை பயன்படுத்தி Thoothukudi Employment office என்ற Telegrame சேனலில் கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ பூர்த்தி செய்து பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0461 - 2340159 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story