தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறையில் 24 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு


தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறையில்  24 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறையில் 24 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட வருவாய் பிரிவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களில் இரவுக்காவலர், மசால்ஜி, தோட்டக்காரர், துப்புரவாளர் உள்ளிட்ட 24 பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே தகுதியானவர்களை அவுட்சோர்சிங் மூலம் அளிக்க அரசு விதிமுறைகளின்படி பதிவு செய்யப்பட்ட, அரசு அங்கீகாரம் பெற்ற தகுதிவாய்ந்த ஏஜென்சிகள் வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story