தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


தூத்துக்குடி மாவட்ட  ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிச.12-ந்தேதி நடக்கிறது

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந் தேதி நடக்கிறது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

குறை தீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், பணியில் இருக்கும்போது மரணமடைந்தவர்கள் ஆகியோரது ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வு கால பலன்கள் பெறுவதில் ஏற்படுகின்ற குறைகளை நேரடியாக கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றும் பொருட்டு 'ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்' தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 16.12.2022 அன்று காலை 10.30 மணிக்கு நடக்கிறது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்குகிறார். சென்னை, ஓய்வூதிய இயக்குநர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார்.

15-ந் தேதி

எனவே, மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியம் தொடர்பான குறைகளை தாங்கள் கடைசியாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற பதவி மற்றும் அலுவலகத்தின் பெயர், ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதிய கொடுப்பாணை எண், ஓய்வூதியம் பெற்றுவரும் கருவூலத்தின் பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி, கைபேசி எண், கோரிக்கை விவரம், கோரிக்கை எந்த அலுவலரிடம் நிலுவையிலுள்ளது? போன்ற விவரங்களுடன் 15.11.2022-ம் தேதிக்குள் மாவட்ட கலெக்டர், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101 என்ற முகவரிக்கு வந்து சேரும்படி இரண்டு பிரதிகளில் விண்ணப்பத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

15.11.2022-க்குப் பின்னர் பெறப்படும் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், விண்ணப்பித்த ஓய்வூதியதாரர்கள் 16.12.2022 அன்று காலை 10.30 மணிக்கு நடத்தப்படும் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story