தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு பிரிவில் டி.ஐ.ஜி. ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு பிரிவில் டி.ஐ.ஜி. ஆய்வு நடத்தினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை போலீஸ் துறையில் நெல்லை சரக டி.ஐ.ஜி. ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்ட மோப்பநாய் பிரிவு, மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறை, தூத்துக்குடி நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு ஆகியவற்றை நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் ஆய்வு செய்தார். அப்போது அலுவலகங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டார்.
ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story