தூத்துக்குடி மாவட்டதிட்டமிடும்குழு உறுப்பினர் தேர்தலுக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு


தூத்துக்குடி மாவட்டதிட்டமிடும்குழு உறுப்பினர் தேர்தலுக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
x

தூத்துக்குடி மாவட்ட திட்டமிடும்குழு உறுப்பினர் தேர்தலுக்கு இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் செந்தில்ராஜ்வெளியிட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று வெளியிட்டார்.

வாக்காளர் பட்டியல்

தூத்துக்குடி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல்-2023 நடைபெற உள்ளது. இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளன.

இந்த இறுதி பட்டியில் வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி இறுதி வாக்காளர் பட்டிலை வெளியிட்டார்.

421 பேர்

இந்த பட்டியலில் மொத்தம் 421 உறுப்பினர்கள் இடம் பெற்று உள்ளனர். மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் 17 பேர், மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் 60 பேர், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் 81 பேர், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 273 பேர் இறுதி வாக்காளர்பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story