தூத்துக்குடியில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
தூத்துக்குடியில் நடைபெற இருந்த மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கடந்தவாரம் 4-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 11-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக இருந்த கூட்டம் மீண்டும் நிர்வாக காரணங்களுக்காக மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும், என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story