தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்


தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்   ரத்த தான முகாம்
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது.

தூத்துக்குடி

பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பொது சுகாதாரத் துறையின் சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த வங்கியில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமுக்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து, ரத்ததானம் செய்தார். தொடர்ந்து மாநகர்நல அலுவலர் அருண்குமார், தொற்று நோயியல் நிபுணர் மெர்வினோ தேவதாசன், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், ஏரல் வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ், சிவத்தையாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜெயலால் சுவாமிநாதன், மக்களைத் தேடி மருத்துவம் சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி மேற்பார்வையாளர்கள், ஆய்வக நுட்பனர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட 51 பேர் ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொது சுகாதாரத் துறையினர் மற்றும் ரத்த வங்கியினர் இணைந்து செய்து இருந்தனர்.


Next Story