தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம்


தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில்  ரத்ததான முகாம்
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமுக்கு டீன் சிவக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஸ்டெர்லைட் நிறுவன டாக்டர் கைலாசம், மருத்துவ கல்லூரி மருத்துவ மனை துணை கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துவ கல்லூரி ரத்த வங்கி மருத்துவர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை பராமரிப்பு துறை பொதுமேலாளர் சரவணன் வரவேற்று பேசினார். முகாமில் ஸ்டெர்லைட் பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் சமுதாய வளர்ச்சி அலுவலர்கள் சுந்தர்ராஜன், மாரியப்பன், பால நாராயணன், ராகவி, அஞ்சுதா, ரமேஷ் கணேஷ், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.ஏ.தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் ராகேஷ் நன்றி கூறினார்.


Next Story