தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில்நோயாளிகளின் உறவினர்களுக்குபாஸ் முறை அறிமுகம்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் உறவினர்களுக்கு பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக டீன் சிவக்குமார்தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் உறவினர்களுக்கு பாஸ் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக டீன் சிவக்குமார் தெரிவித்துள்ளா்.
கண்காணிப்பு கருவி
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பொது மருத்துவத் துறையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு மறுசீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. அதனை மருத்துவமனை டீன் சிவக்குமார் நேற்று தொடங்கி வைத்து பேசினார். அப்போது, இந்த தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி இந்த வார்டில் 'சென்ட்ரல் மானிட்டரிங் சிஸ்டம்' என்ற நவீன கண்காணிப்பு கருவி பொறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் நோயாளிகளின் உடல்நிலையை, மருத்துவர்கள் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக கண்காணிக்க முடியும்.
பாஸ் அறிமுகம்
மேலும், நோய் கிருமி தாக்கத்தை குறைக்கவும், நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இருந்து நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக நோயாளிகளுடன் தங்கியிருக்கும் உறவினர்களுக்கு 'அட்டெண்டர் பாஸ்' முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த வார்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும். நோயாளிகளின் நிலை பற்றி உறவினர்களுக்கு எடுத்துக்கூறவும், மக்களுக்கான பொது சுகாதாரத்தை பற்றி எடுத்துரைக்கவும் தகவல் தொடர்பு சாதனம் (மைக், ஒலிபெருக்கி) பொறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் நோயாளிகளுக்கான கவனிப்பும், பொது சுகாதாரம் சம்பந்தப்பட்ட அரசின் செய்திகளையும், அறிவிப்புகளையும் எளிதாக செய்ய முடியும் என்று டீன் சிவக்குமார் தெரிவித்தார்.
கொரோனா
மேலும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வருவோர் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசின் நெறிமுறையும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நடைமுறைக்கு வந்து உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டு, முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், ஆஸ்பத்திரி வளாகத்தில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.
நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.