தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சுகாதார பணிகள் திட்ட இயக்குநர் திடீர் ஆய்வு
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சுகாதார பணிகள் திட்ட இயக்குநர் திடீர் ஆய்வு நடத்தினார்.
தூத்துக்குடி
தமிழக அரசின் சுகாதார பணிகள் திட்ட இயக்குநர் கோவிந்தராவ் நேற்று திடீரென தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் தீவிர மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் ஆய்வு மேற்கொண்டார். இருதய நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்ட் சிசிச்சை அளிக்கும் பகுதிகளை பார்வையிட்டார். இந்த பிரிவில் நேற்று முன்தினம் ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை பெற்றவர்களிடம் சிகிச்சை மற்றும் கவனிப்பு குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், மருத்துவமனை டீன் சிவக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story