தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணம் திருட்டு


தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணம் திருடப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணம் திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவ உபகரணம்

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையிலும் நவீன உபகரணங்கள் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அறுவை சிகிச்சை அரங்குகளிலும் மருத்துவ உபகரணங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு அறுவை சிகிச்சை அரங்கில் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் மதிப்புள்ள தமனி ரத்த வாயு பகுப்பாய்வி மற்றும் எலக்ட்ரோலைட் அளவீடு கருவி பயன்பாட்டில் இருந்தது. கடந்த 20.09.21 முதல் அந்த கருவியை காணவில்லை என்று கூறப்படுகிறது.

விசாரணை

இது குறித்து அப்போதைய டீன் நேரு தென்பாகம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மனுவை பதிவு செய்து ரசீது வழங்கினர். தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் புகார் அடிப்படையில் திருட்டு வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story