தூத்துக்குடி அரசு நடுநிலைப்பள்ளியில்மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த கோரிக்கை


தூத்துக்குடி அரசு நடுநிலைப்பள்ளியில்மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த கோரிக்கை
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி

இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், தூத்துக்குடி முத்தம்மாள்காலனியில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் காலையில் தாமதமாக திறந்தும், மாலையில் விரைவாகவும் பள்ளிக்கூடத்தை மூடிவிடுகின்றனர்.

இதனால் காலை, மாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு வெளியில் காத்து நிற்கும் நிலை உள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் வருகைப்பதிவை பயோ மெட்ரிக் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை, கற்பிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை ஒப்பிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும். மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.


Next Story