தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் ரெயில் நாரைகிணறில் நின்று செல்லும்
தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் ரெயில் நாரைகிணறில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடி-நெல்லை இடையே இயக்கப்பட்டு வரும் முன்பதிவு இல்லாத ரெயில் நாரைக்கிணறு ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நாரைக்கிணறு
தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கும் முன்பதிவு இல்லாத ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்கள் மணியாச்சி அருகே உள்ள நாரைக்கிணறு ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து பயணிகளின் வசதிக்காக வருகிற 1-ந் தேதி முதல் தூத்துக்குடி-நெல்லை-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் ரெயில்கள் நாரைக்கிணறு ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
நேரம் விவரம்
அதன்படி தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் இரவு 7.15 மணிக்கும், நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சிறப்பு ரெயில் காலை 8 மணிக்கும் நாரைகிணறு ரெயில் நிலையத்துக்கு வந்து புறப்பட்டு செல்லும். இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.