தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடக்கிறது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி மத்திய ஒன்றியம் செயல்வீரர்கள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு பாண்டவர் மங்கலம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடக்கிறது. காலை 11.30 மணிக்கு கோவில்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாலாட்டின் புதூர் கோகுலம் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இந்த தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் எனது (கீதாஜீவன்) தலைமையில் நடைபெற உள்ளது. தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார்.
எனவே சம்பந்தப்பட்ட ஒன்றிய கழகத்துக்கு உட்பட்ட கிளைகழக செயலாளர்கள், பிரதிநிதிகள், கழகத் தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும், கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட ஒன்றிய செயலாளர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.