தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வௌ்ளிக்கிழமை நடக்கிறது
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வௌ்ளிக்கிழமை நடக்கிறது என அமைச்சர் கீதாஜீவன்தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கலைஞர் அரங்கில் நடக்கிறது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்குகிறார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த தகவலை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்து உள்ளார்.