தூத்துக்குடி துறைமுக பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


தூத்துக்குடி துறைமுக பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x

தூத்துக்குடி துறைமுக பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப்பள்ளியில் 1989-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை மேல்நிலைக் கல்வி படித்த மாணவ, மாணவிகள் 21 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைமை ஆசிரியர் ஆன்டனி பவள ஹெக்டோ, தலைமை ஆசிரியை ஷர்மிளா ஆகியோர் தலைமை தாங்கினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். தங்கள் நண்பர்களை பார்த்து மகிழ்ச்சி பொங்க பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளி மேம்பாட்டுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் மந்திரமூர்த்தி, செந்தில், பழனித்தாய், சுபகார்த்திகா, கனகராஜ், மாடசாமி ஆகியோர் செய்து இருந்தனர். முன்னாள் மாணவர் பேச்சிமுத்து நன்றி கூறினார். நிகழ்ச்சியை செல்வசரவணன், இசக்கியம்மாள் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.


Next Story