தூத்துக்குடியில்ரமலான் சிறப்பு தொழுகை


தூத்துக்குடியில்ரமலான் சிறப்பு தொழுகை
x

தூத்துக்குடியில்ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் நேற்று ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

ரமலான் பண்டிகை

இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது வழக்கம் ஆகும். அதன்படி கடந்த மாதம் 24-ந் தேதி இஸ்லாமிய மக்கள் நோன்பை கடைபிடிக்க தொடங்கினர். நோன்பு காலத்தில் காலையில், சூரிய உதயத்துக்கு முன்பு உணவு அருந்தி விட்டு சூரியன் மறையும் நேரம் வரை, உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல், நோன்பு கடைப்பிடிப்பார்கள். ரமலான் மாதத்தின் கடையில் பிறை தெரியும் நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று சவுதி அரசின் தகவலின்படி பல்வேறு இடங்களில் நேற்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

சிறப்பு தொழுகை

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசலில் நேற்று ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது. பள்ளி இமாம்கள் அத்கர், அபுசார் ஆகியோர் தொழுகை நடத்தினர். ரமலான் மாதம் முழுவதும் இரவு தொழுகையும் அதன் தொடர்ச்சியாக மார்க்க சொற்பொழிவுகளும் நடைபெற்று, கேள்வி கேட்கப்பட்டு சரியாக பதில் அளித்தவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பரிசுகளை மஸ்ஜித் ரஹ்மான் பள்ளி தலைவர் கா.மை.அகமது இக்பால் வழங்கினார். அதே போன்று தொடர்ச்சியாக மார்க்க சொற்பொழிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் இஸ்மாயில், நிர்வாகிகள் சுலைமான், முகமது, நவாஸ், அண்ணல் மைதீன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story