தூத்துக்குடி தெற்கு மாவட்டத.மா.கா. தலைவர் பிறந்தநாள் விழா


தூத்துக்குடி தெற்கு மாவட்டத.மா.கா. தலைவர் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் எஸ். டி. ஆர். விஜயசீலன் ஐம்பதாவது பிறந்த தின விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் வட்டார தலைவர் எம்.சுந்தரலிங்கம் தலைமையில் காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரத்தை கட்சியினர் வழங்கினர். நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி நகர தலைவர் முருகன், தூத்துக்குடி மாநகர தலைவர் ரவிக்குமார், புதூர் மேற்கு வட்டாரத் தலைவர் திருப்பதி, மாவட்ட இளைஞரணி தலைவர் பொன் ராஜா, ஆழ்வார் திருநகரி ஒன்றிய செயலாளர் முரளி கார்த்திக், துணைத் தலைவர் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு வட்டார தலைவர் கீரனூர் முருகேசன் தலைமையில் வட்டார செயலாளர் முரளி கார்த்திக் தங்க மோதிரம் வழங்கினார். ஸ்ரீவைகுண்டம் வட்டார த.மா.கா. சார்பில் முக்காணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மூக்கன் சாமி வழங்கினார். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வட்டாரத் தலைவர் சுந்தரலிங்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story