தூத்துக்குடி மாணவர்கள் அடிமுறை சிலம்பம் சுற்றி சாதனை
தூத்துக்குடி மாணவர்கள் அடிமுறை சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர்.
தூத்துக்குடி
தேனி மாவட்டம் சின்னம்மனூரில் உலக சாதனைக்காக தொடர்ந்து சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பம் விளையாடினர். தொடர்ந்து 6 மணி நேரம் அடிமுறை சிலம்பம் விளையாடி உலக சாதனை படைத்தனர். இதனை தொடர்ந்து சாதனை படைத்த மாணவ, மாணவிகள் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டனர். மேலும் சாதனை படைத்த மாணவ, மாணவிகள், தேசிய பயிற்சியாளர், வீரத்தமிழன் போர்க்கலை சிலம்பக்கூட ஆசான் சுடலை மணி, சிலம்பம் பயிற்சியாளர் வெள்ளையாராஜா ஆகியோரை பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story