தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில்1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில்1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் தெற்கு, தென்கிழக்கே நிலைகொண்டு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, தென்மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரி கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும். மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவித்து உள்ளது.

எச்சரிக்கை கூண்டு

இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அனைத்து மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மேலும், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதை அறிவிக்கும் வகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.


Next Story