தூத்துக்குடி விமான நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட ஓய்வு கூடம் திறப்பு
தூத்துக்குடி விமான நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட ஓய்வு கூடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட ஓய்வு கூடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
விமான நிலையம்
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த விமான நிலையத்தில் விமான ஓடுதளம் விரிவாக்கம், பயணிகள் முனையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் தற்போது உள்ள பயணிகள் முனையத்திலும், பயணிகள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஓய்வு கூடம் திறப்பு
அதன்படி விமான நிலையத்தில் உள்ள ஓய்வுக்கூடம் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணி முடிக்கப்பட்டு நேற்று காலையில் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு விமான நிலைய இயக்குனர் சிவபிரசாத் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட ஓய்வு கூடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, விமான நிலைய மேலாளர் ஜெயராமன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.