தூத்துக்குடி விவசாயிகள் கல்வி சுற்றுலா


தூத்துக்குடி  விவசாயிகள் கல்வி சுற்றுலா
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி விவசாயிகள் கல்வி சுற்றுலா சென்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வட்டாரம் மாநில விரிவாக்கத்திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான விவசாயிகள் கல்வி கண்டறி சுற்றுலாவாக, வாகைக்குளம் வேளாண்மை அறிவியல் மையத்துக்கு விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு தேனீ வளர்ப்பு குறித்த கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கில் தேனீக்களின் வகைகள், தேனீ வளர்ப்பின் போது கையாள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் தேனீ வளர்ப்பின் அவசியம் குறித்து பூச்சியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் முத்துக்குமார் விளக்கி கூறினார். தேனீ வளர்ப்பில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் முறைகள் குறித்து மனையியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் சுமதி விளக்கினார். உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆரம்பிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அரசின் மானியத்திட்டங்கள் குறித்து துணை வேளாண்மை அலுவலர் ஆனந்தன் பேசினார். மேலும் உழவன் செயலியின் பயன்பாடுகள் மற்றும் பயிர் காப்பீடு செய்வதன் அவசியம் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுடலைமணி பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முத்துகிருஷ்ணன் மற்றும் பகவதிகுமார் ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story