தூத்துக்குடிவ.உ.சி துறைமுகத்தின் புதிய லோகோ அறிமுகம்


தூத்துக்குடிவ.உ.சி துறைமுகத்தின் புதிய லோகோ அறிமுகம்
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தின் புதிய லோகோ வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் புதிய லோகோவை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சக செயலாளர் தா.கி.ராமச்சந்திரன் நேற்று அறிமுகப்படுத்தினார்.

லோகோ மாற்றம்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் லட்சினையை (லோகோ) மாற்றுவதற்கான துறைமுகம் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்காக அகில இந்திய அளவில் லோகோ வரைந்து அனுப்பும் போட்டி நடந்தது. இதன் மூலம் புதிய லோகோ உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த லோகோ அறிமுக நிகழ்ச்சி நேற்று காலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் (பொறுப்பு) பிமல்குமார் ஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சக செயலாளர் தா.கி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு லோகோவை அறிமுகப்படுத்தி பேசினார்.

பெருமை

அப்போது, புதிய லோகோவை அறிமுகம் செய்வது பெருமையாக இருக்கிறது. இந்த லோகோவை உருவாக்க ஓராண்டாக முயற்சி செய்து வந்தோம். அந்த கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது. இந்த லோகோவில் உள்ள தத்துவங்கள் நன்றாக இருக்கிறது. இதற்காக ஒரு போட்டி நடத்தப்பட்டு, அதன் மூலம் லோகோவுக்கான கரு கிடைத்தது. இந்த லோகோ எளிமையாகவும், நவீனமாகவும் உள்ளது. நமக்கு எப்போதும் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். தூத்துக்குடி துறைமுகம் உலகின் சிறந்த துறைமுகமாக மாறும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக ஆணைய போக்குவரத்து மேலாளர் ஆர்.பிரபாகர், நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி ஏ.கே.ஷாகு, துணை பாதுகாவலர் கேப்டன் பிரவீன்குமார் சிங், தலைமை பொறியாளர் கே.ரவிக்குமார், தலைமை இயந்திரவியல் பொறியாளர் வி.சுரேஷ்பாபு, துறைமுக சபை உறுப்பினர் சத்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story