தூத்துக்குடிமடுஜெபமாலை மாதா ஆலய அசன பெருவிழா
தூத்துக்குடி மடுஜெபமாலை மாதா ஆலய அசன பெருவிழா நடந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி தாளமுத்துநகா் மடுஜெபமாலை மாதா ஆலயத்தில் அசனப் பெருவிழா நடந்தது. விழாவுக்கு பங்குதந்தை நெல்சன்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவா் சரவணக்குமாா், யூனியன் தலைவர் வசுமதிஅம்பாசங்கா் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் அனைத்து ஊர் நிர்வாகிகளும் சாதி, மத பாகுபாடு இன்றி அழைத்து சர்வ சமய பொது அசன விழாவாக கொண்டாடப்பட்டது.
விழாவில் தாளமுத்துநகா் முன்னாள் உதவி பங்குதந்தை பிபின், ஒன்றிய கவுன்சிலா்கள் இரா.பாலன், தொம்மைசேவியா் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினா்கள் பாரதிராஜா, ஜேசு உள்பட பலர் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை நெல்சன், உதவி பங்குதந்தை வின்சென்ட் மற்றும் ஊர் நிர்வாகிகள், பங்கு மக்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story