தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் ரூ.65 லட்சம் மோசடி


தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் ரூ.65 லட்சம் மோசடி
x

தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் ரூ.65 லட்சம் மோசடி

திருப்பூர்

பல்லடம்

பல்லடம் பனப்பாளையம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பள்ளி முதல்வராக பணியாற்றிய ரீனா கிறிஸ்டி, காசாளராக பணியாற்றிய பூங்கொடி, ஆசிரியராக பணியாற்றிய கலைவாணி, ஆகிய மூவரும் சேர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் வசூல் செய்த கல்வி கட்டணத்தை பள்ளியின் வங்கிக் கணக்கில் செலுத்தாமல், முறைகேடாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தி, மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பள்ளி தாளாளர் அபரஜிதா பள்ளியின் வரவு- செலவு கணக்குகளை சரிபார்த்த போது ரூ. 65 லட்சம் அளவில் அவர்கள் மோசடி செய்தது தெரியவந்தது. இதை அடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

----


Next Story